மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் வேணுகோபாலின் பதவிக் காலம் ஓராண்டு நீட்டிக்கப்பட வாய்ப்பு

0 2662

அட்டர்னி ஜெனரலாக மூத்த வழக்கறிஞராக பணியாற்றி வரும் கே.கே.வேணுகோபாலின் பதவிக்காலம் மேலும் ஒராண்டுக்கு நீட்டிக்கப்பட உள்ளது.

கடந்த 2017-ம் ஆண்டு நியமிக்கப்பட்ட இவரது பதவிக்காலம் கடந்த ஆண்டு நிறைவடைந்தது. இதையடுத்து அவர் கேட்டு கொண்டதற்கு இணங்க, அவருக்கு மேலும் ஓராண்டு பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டது. இந்த நிலையில், நீட்டிக்கப்பட்ட பதவிக்காலம் இந்த மாதத்துடன் நிறைவடையவுள்ளது.

உச்சநீதிமன்றத்தில்  நடைபெறும் முக்கிய வழக்குகளில் அவர் ஆஜராகி வருவதையும், வழக்கறிஞராக  நீண்டகாலம் அவருக்குள்ள அனுபவத்தையும் கருத்தில்கொண்டு அவரது பதவிக்காலத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல்  வெளியாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments