யூரோ கோப்பை கால்பந்துப் போட்டி: காலிறுதியில் ஸ்பெயின்- சுவிட்சர்லாந்து அணிகள்
யூரோ கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரின் நாக்-அவுட் சுற்று ஆட்டங்களில் ஸ்பெயின், சுவிட்சர்லாந்து அணிகள் வெற்றி பெற்று கால்இறுதிக்கு முன்னேறின
டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகன் மைதானத்தில் நடந்த நாக்-அவுட் சுற்று ஆட்டத்தில் ஸ்பெயின், குரேஷியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
ஆட்டத்தின் முதல் பாதியில் 20-வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் Pedri-யின் சுய கோல் உதவியுடன் குரேஷியா புள்ளி கணக்கை தொடங்கியது. தொடர்ந்து ஸ்பெயின் வீரர்கள் 38, 57, 76 ஆகிய நிமிடங்களில் அடுத்தடுத்து கோல் போட்டு புள்ளி கணக்கை உயர்த்தினர்.
அதேநேரம் குரேஷிய அணியிலும் 85 மற்றும் இறுதி நிமிடத்தில் கோல் அடிக்கப்பட்டதால் ஆட்டம் சமனில் முடிந்தது. தொடர்ந்து நடந்த இன்ஜூரி டைம் என்ற கூடுதல் நேரத்தில் ஸ்பெயின் வீரர்கள் Alvaro Morata மற்றும் Mikel Oyarzabal அடுத்தடுத்து கோல் திருப்பி அணியின் வெற்றியை உறுதி செய்தனர். இறுதியில் 5-க்கு 3 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் அணி போராடி கால்இறுதிக்கு முன்னேறியது.
பிரான்ஸ் அணியிலும் 57 மற்றும் 59-வது நிமிடங்களில் Karim Benzema மற்றும் 75-வது நிமிடத்தில் Paul Pogba அடுத்தடுத்து கோல் திருப்பினார். தொடர்ந்து இறுதி நிமிடத்தில் சுவிஸ் வீரர் Mario Gavranović கோல் அடித்து ஆட்டத்தை சமன் செய்தார். தொடர்ந்து நடந்த கூடுதல் நேர ஆட்டத்திலும் முடிவு தெரியாமல் போக தொடரில் முதல் முறையாக பெனால்டி முறை நடத்தப்பட்டது.
பெனால்டி வாய்ப்பை பயன்படுத்திய சுவிஸ் அணி இறுதியில் 5-க்கு 4 என்ற கோல் கணக்கில் வென்று நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியது.
யூரோகோப்பை வரலாற்றில் பிரான்சை வென்றது இதுவே முதன்முறையாகும். நூலிழையில் பிரான்ஸ் அணி தோல்வியை தழுவியது அந்நாட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
Comments