காக்கிச்சட்டையா கலர் சுடிதாரா…? அக்கா அட்டகாசம்..! லூசு .. சனியனே… என போலீசிடம் சத்தம்

0 16206
காக்கிச்சட்டையா கலர் சுடிதாரா…? அக்கா அட்டகாசம்..! லூசு .. சனியனே… என போலீசிடம் சத்தம்

காரைக்காலில் முககவசம் அணியாமல் இரு சக்கர வாகனத்தில் வந்த சுகாதாரத்துறை பெண் ஊழியர் ஒருவர் , அபராதமெல்லாம் செலுத்த முடியாது எனக் கூறி பெண் போலீசுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் போலீசாரை தரக்குறைவான வார்த்தைகளால் வசைபாடிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

முககவசம் அணிவது கொரோனாவில் இருந்து நம்மை மட்டுமல்ல சுற்றி இருப்பவர்களையும் காக்கும் என்பதை மறந்து, அதனை அணிய அறிவுறுத்தும் காவலர்களுடன் ஆவேசம் காட்டும் வாகன ஓட்டிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

அந்தவகையில் புதுச்சேரி யூனியன் பிரதேசம் காரைக்கால் மாவட்டத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், வாகன தணிக்கையில் ஈடுபட்ட போலீசாரிடம் முகக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வந்து சிக்கிய பெண் ஒருவர் செய்த அட்ரா சிட்டியால் அனல் பறந்தது.

பெண் போலீஸ் ஒருவர் அவரை மறித்து முகக்கவசமின்றி வந்ததற்காக அபராதம் விதிக்க முற்பட்டார். அவ்வளவு தான்...தனக்கு கொரோனா வராது என்றும், முககவசம் எல்லாம் அணிய முடியாது என்றும் கூறியதோடு, என்ன நோட்டு அடிக்கிற மிஷினா வச்சிருக்கோம் கேட்டவுடன் அபராதம் கட்டுவதற்கு என்று ஆக்ரோசமானார்

தான் புதுச்சேரி சுகாதாரத் துறையில் உதவியாளராக பணி புரிவதாக கூறிய அந்த பெண், ஏற்கனவே புதுச்சேரியில் ஒரு தடவை அபராதம் கட்டிய நிலையில் காரைக்காலிலும் அபராதம் கட்ட வேண்டுமா ? எனக் கேட்டதோடு முககவசம் போட வேண்டும் என்று உத்தரவு போட்டவர்களை வரச்சொல்லுங்க என்று குரலை உயர்த்தினார். பெண் போலீசோ அந்த உத்தரவு கலெக்டர் போட்டிருப்பதாக தெரிவித்தார்.

அவ்வப்போது தன்னை வீடியோ எடுக்கும் போலீஸ்காரரை பார்த்து லூசு என்றும் சனியனே என்றும் வசைபாடியதோடு அபராதம் கட்டப்போவதில்லை என்பதில் பிடிவாதமாக இருந்தார். இருவரும் பெண்கள் என்பதால் ஒருவருக்கொருவர் சளைத்தவரில்லை என்பது போல வாய்சத்தம் ஓங்கி நின்றது

இதுக்கு ஒரு முடிவே இல்லையா என்பதை போல பெண் போலீசிடம் மல்லுக்கு நின்ற அந்த பெண் சுகாதாரத்துறை உதவியாளரை வண்டியுடன் ஓரங்கட்டிய போலீசார், அபராத ரசீதை கையில் கொடுத்து 100 ரூபாயை அபராதமாக பெற்றுக் கொண்டு வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

தமிழகத்தில் முககவசத்தை மறந்து ஆடாத ஆட்டம் ஆடியவர்களை எல்லாம் நீதிமன்றம் உச்சந்தலையில் குட்டி வரும் நிலையில், புதுச்சேரியில் முககவசம் அணிய அறிவுறுத்த வேண்டிய சுகாதாரத்துறை உதவியாளரே எல்லை மீறி பேசி இருப்பது வேதனைக்குறியது. மக்களை நண்பர்களாக பார்க்க கூடிய காவல்துறையினரும் இருக்கின்றனர் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணரவேண்டும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments