கைக் குழந்தையுடன் கணவரால் விரட்டப்பட்ட பெண்... ஐஸ்கிரீம், சோடா விற்று, அதே ஊரில் காவல் உதவி ஆய்வாளராக தேர்ச்சி பெற்று சாதனை

0 40307

கேரளாவில் காதல் கணவரால் கைவிடப்பட்டு, குழந்தையுடன் சாலையில் ஐஸ்கிரீம் விற்று பிழைத்து வந்த பெண், அதே ஊரில் காவல்துறை அதிகாரியாக பணியில் அமர்ந்துள்ள நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வர்க்கலாவை சேர்ந்த ஆனி சிவா, தனது கல்லூரி படிப்பின் போது பெற்றோர் எதிர்ப்பை மீறி காதலித்தவரை திருமணம் செய்துக் கொண்டார்.

கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் 6 மாதக் கைக்குழந்தையுடன் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட ஆனியை பெற்றோர் வீட்டிலும் சேர்த்துக் கொள்ளவில்லை.

ஆனாலும், வைராக்கியத்துடன் இருந்த ஆனி, டெலிவரி செய்வது, திருவிழாக்களில் ஐஸ்கிரீம், குளிர்பானங்கள் விற்பனை செய்வது என கிடைத்த வேலைகளை பார்த்துக் கொண்டு கல்வியையும் விடாமல் தொடர்ந்து வந்துள்ளார்.

தற்போது காவலர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று, சாலையில் ஐஸ்க்ரீம் விற்பனை செய்த ஊரில் உதவி ஆய்வாளராக ஆனி பணிக்குச் சேர்ந்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments