”ஆந்திராவில் அரசுப் பணிகளுக்கு இனி நேர்முகத் தேர்வு இல்லை” -ஆந்திரா அரசு அறிவிப்பு
ஆந்திர மாநிலத்தில், குரூப் 1 உள்ளிட்ட அரசுப் பணிகளுக்கான தேர்வில் இனி நேர்முகத் தேர்வு நடத்தப்படாது என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், ஆந்திர மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் கீழ் நடத்தப்படும் அனைத்து தேர்வுகளிலும் இனி நேர்முகத் தேர்வுகள் நடத்தப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு நடைமுறையின் மீதான வெளிப்படைத் தன்மையைப் பேணுவதற்கும், நம்பிக்கையை உறுதி செய்யும் வகையிலும், இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments