தமிழ்நாட்டின் புதிய டிஜிபி யார்? : ஒரிரு நாளில் அறிவிப்பு வெளியாகும் எனத் தகவல்

0 4277
தமிழ்நாட்டின் புதிய டிஜிபி யார்? : ஒரிரு நாளில் அறிவிப்பு வெளியாகும் எனத் தகவல்

தமிழ்நாடு காவல்துறையின் புதிய DGP யார்? என்பது குறித்த அறிவிப்பு, ஒரிரு நாளில் வெளியாகும் என எதிர்பார்க்கப் படுகிறது.

தற்போதைய DGP திரிபாதியின் பதவிக்காலம் வருகிற 30 ஆம் தேதியுடன் முடிவடைவதால், புதிய DGP -ஐ தேர்வு செய்யப்பட வேண்டும்.

இதற்காக, புதுடெல்லியில் திங்கட்கிழமை கூடும் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக தலைமைச்செயலாளர் இறையன்பு, உள்துறை செயலாளர் எஸ்.கே. பிரபாகர், DGP திரிபாதி ஆகியோர் விமானம் மூலம் புறப்பட்டு சென்றுள்ளனர்.

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் மற்றும் உள்துறை அமைச்சக மூத்த அதிகாரிகளும் பங்கேற்கும் புதுடெல்லி கூட்டத்தில்  DGP பதவிக்கு 3 பெயர்கள் பரிந்துரை செய்யப்படும். இவர்களில் இருந்து ஒருவர், தமிழ்நாட்டின் புதிய DGP ஆக நியமிக்கப்படுவார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments