டெல்லி மருத்துவமனைகளுக்கு ஸ்புட்னிக் -வி தடுப்பூசி கிடைப்பதில் மேலும் தாமதம் ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்
டெல்லி மருத்துவமனைகளில் ஸ்புட்னிக் -வி தடுப்பூசி கிடைப்பதில் மேலும் தாமதம் ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜூன் 25 ஆம் தேதி வாக்கில் இந்த தடுப்பூசி வழங்கப்படும் என இந்தியாவில் அதன் மார்க்கெட்டிங் பார்ட்னரான டாக்டர் ரெட்டிஸ் தெரிவித்திருந்தது.
ஆனால் இதுவரை தடுப்பூசி கிடைக்கவில்லை என டெல்லி மற்றும் குருகிராமில் உள்ள பெரிய மருத்துவமனைகள் தெரிவித்துள்ளன.
ஸ்புட்னிக்-வி தடுப்பூசியின் இரண்டு டோசுகளும் தனித்தனியாக இரண்டு வித தடுப்பு மருந்துகளாக தயாரிக்கப்படுபவை. அவற்றை 21 நாள் இடைவெளியில், பயன்படுத்த வேண்டும்.
இந்த நிலையில், 2 ஆம் டோஸ் மருந்து உற்பத்தியில் தாமதம் ஏற்பட்டு சப்ளை பாதிக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
Comments