பாரீசில் நடைபெற்ற உலக வில்வித்தைப் போட்டியில் இந்திய மகளிர் அணி தங்கப் பதக்கம்..!
பாரீசில் நடைபெற்ற உலகக் கோப்பை வில்வித்தைப் போட்டியில் இந்திய மகளிர் அணி தங்கப்பதக்கம் வென்றுள்ளது.
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் உலகக் கோப்பை வில்வித்தைப் போட்டியில் இந்திய மகளிர் அணி சார்பில் தீபிகா குமாரி, கோமளிகா பாரி, அங்கிதா பகத் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இவர்கள் இறுதிச் சுற்றில் மெக்சிகோ அணியை ஐந்துக்கு ஒன்று என்கிற கணக்கில் வீழ்த்தித் தங்கப்பதக்கம் வென்றனர். இந்திய அணியினர் கடந்த வாரம் நடந்த போட்டியில் கொலம்பிய அணியிடம் தோற்றதால் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்கான தகுதியை இழந்தனர்.
Comments