பால்யகால நண்பரின் வீட்டுக்கு சென்று சந்தித்த குடியரசு தலைவர்

0 3994
பால்யகால நண்பரின் வீட்டுக்கு சென்று சந்தித்த குடியரசு தலைவர்

கான்பூருக்கு வந்துள்ள குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த், தமது பால்யகால நண்பரான கே.கே.அகர்வாலின் வீட்டுக்கு சென்று அவரை சந்தித்தார்.

4 நாள் பயணமாக கான்பூருக்கு வந்துள்ள குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த், அங்கு தமது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களை சந்தித்து வருகிறார். 15 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக குடியரசு தலைவர் ஒருவர் ரயிலில் பயணம் செய்கிறார் என்ற வகையில் அவர் ரயிலில் கான்பூருக்கு வந்தார். உள்ளூர் பிரமுகர்களை தாம் தங்கியுள்ள கான்பூர் சர்க்யூட் ஹவுசில் சந்திக்க அழைப்பு விடுத்த குடியரசு தலைவர், அகல்வாலை அவரது வீட்டுக்கு நேரடியாக சென்று சந்திக்க முடிவு செய்தார்.

துணி வியாபாரியான அகர்வால் கடந்த சில வாரங்களாக உடல் நலமில்லாமல் இருக்கிறார். அவரை காண சென்ற குடியரசு தலைவர், அகர்வாலின் 51 ஆவது திருமண நாளை ஒட்டி கேக் ஒன்றையும் எடுத்து சென்றார். 

தமது ஏழை நண்பனான சுதாமாவை பார்க்க கிருஷ்ண பகவான் சென்றதை குடியரசு தலைவரின் வருகை தமக்கு நினைவுபடுத்தியதாக அகர்வால் பின்னர் கூறினார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments