டெல்டா பிளசுக்கு எதிரான நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் - மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு சுகாதாரத்துறை முதன்மை செயலர் உத்தரவு
டெல்டா பிளஸ் பாதிப்புகளுக்கு எதிரான நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர்களுக்கு தமிழ்நாடு சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.
டெல்டா + ஆய்வில் கடும் நுரையீரல் பாதிப்பு , நோய் எதிர்ப்பு சக்தி குறைதல் ஆகியனஅதிகம் கண்டறியப்பட்டுள்ளது. எனவே டெல்டா + வகை பாதிப்பு உள்ளவர்களின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, ஏதேனும் அறிகுறிகள் தென்படும் பட்சத்தில் உடனடியாக அவர்களுக்கு தேவையான சிகிச்சை வழங்க வேண்டும் என அவர் அறிவுறுத்தி உள்ளார்.
உருமாற்றம் அடைந்த புதிய பாதிப்புகள் கண்டறியப்பட்டால், உடனடியாக சுகாதார துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.
Comments