உ.பி.யில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்து போட்டியிடும் - கட்சி தலைவர் மாயாவதி டுவிட்டரில் தகவல்
அடுத்த ஆண்டு நடக்கவுள்ள உத்தரபிரதேச சட்டப்பேரவை தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி, யாருடனும் கூட்டு வைக்காமல் தனித்து போட்டியிடும் என அதன் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.
உத்தர பிரதேசத்தில், அசாசுதீன் உவைசியின் மஜ்லிஸ் கட்சியுடன் பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணி வைக்கும் என ஊடகம் ஒன்றில் வெளியான செய்தியை, தவறு என மாயாவதி டுவிட்டரில் மறுத்துள்ளார்.
அடுத்த ஆண்டு நடக்கும் 5 மாநில தேர்தல்களில், பஞ்சாப் தவிர, உத்தர பிரதேசத்திலோ, உத்தரகாண்டிலோ எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்கப்படாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பஞ்சாபில் ஏற்கனவே பகுஜன் சமாஜ்- சிரோன்மணி அகாலி தள கூட்டணி உறுதி செய்யப்பட்டு தொகுதி பங்கீடும் நடத்தப்பட்டு விட்டது குறிப்பிடத்தக்கது.
Comments