யூரோ கோப்பை கால்பந்து சாம்பியன்ஷிப் தொடர் : டென்மார்க், இத்தாலி அணிகள் வென்று கால்இறுதிக்கு முன்னேறின

0 4922

யூரோ கோப்பை கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரின் நாக்-அவுட் சுற்று ஆட்டங்களில் டென்மார்க் மற்றும் இத்தாலி அணிகள் வென்று கால்இறுதிக்கு முன்னேறின.

நெதர்லாந்தின் ஆம்ஸ்டெர்டாம் மைதானத்தில் நடந்த முதலாவது நாக்-அவுட் சுற்று ஆட்டத்தில் வேல்ஸ், டென்மார்க் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஆட்டத்தின் முதல் பாதியிலே 27 மற்றும் 48-வது நிமிடங்களில் டென்மார்க் வீரர் Kasper Dolberg அடுத்தடுத்து கோல் திருப்பி அணியின் புள்ளி கணக்கை தொடங்கினார்.

2-ஆம் பாதியிலும் டென்மார்க் அணியே கோலோச்சியது. அந்த அணியின் வீரர்கள் Joakim Maehle மற்றும் Martin Braithwaite 88 மற்றும் இறுதி நிமிடத்தில் கோல் அடித்து அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.

இறுதியில் 4-க்கு 0 என்ற கோல் கணக்கில் டென்மார்க் அணி வென்று முதல் அணியாக கால்இறுதிக்கு முன்னேறியது. முன்னதாக இறுதி நிமிடத்தில் கோல் போடுவதில் ஏற்பட்ட தகராறில் வேல்ஸ் வீரர் Harry Wilson-க்கு சிவப்பு அட்டை வழங்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments