சென்னை காசிமேடு மீன் சந்தையில் சமூக இடைவெளியின்றி அதிகாலை முதலே திரண்ட அசைவப் பிரியர்கள்
ஞாயிற்றுக்கிழமை என்பதால் சென்னை மீன் சந்தைகளில் தனிநபர் இடைவெளியை காற்றில் பறக்கவிட்டு, நூற்றுக்கணக்கானோர் மீன் வாங்க குவிந்தனர்.
சிந்தாதிரிப்பேட்டை மீன் மார்க்கெட்டில் அதிகாலை முதலே மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. வரத்து குறைவு காரணமாக, வஞ்சிரம் மீன் கிலோ 900 ரூபாய் வரையும், வவ்வால் மீன் 700 ரூபாய் வரையும் விலை வைத்து விற்கப்பட்டது.
காசிமேடு மீன் சந்தையில் அதிகாலை முதலே ஏராளமானோர் மீன் வாங்க திரண்டதால் சமூக இடைவெளியை கடைபிடிக்க முடியாத நிலை உருவானது.
பட்டினப்பாக்கத்திலும் தனிநபர் இடைவெளியை மறந்து மீன்களை வாங்க மக்கள் கூட்டம் திரண்டது.
மீன்சந்தைகளில் பலர் முகக்கவசம் இல்லாமல் சுற்றி வந்தனர். இருசக்கர வாகனங்களை சாலையின் இரு புறமும் முன்னுக்கு பின்னாக நிறுத்தியதால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
Comments