பாடப்புத்தகங்களில் பெண்களை இழிவுபடுத்தும் பகுதிகளை நீக்க முதலமைச்சர் பினராயி விஜயன் உத்தரவு

0 3556

பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பாடப்புத்தகங்களில் இடம்பெற்றுள்ள வாசகங்களைத் தணிக்கை செய்யும் நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாக முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

பாலின சமத்துவத்தைப் பாதுகாக்கும் வகையிலும் பெண்களுக்கு எதிரான அவதூறு கருத்துகளையும் நீக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பெண்கள் குறித்த விபரீத எண்ணங்களை அடிப்படைக் கல்வியிலிருந்தே மாற்றுவதற்கான நடவடிக்கையை கேரள அரசு தொடங்கி உள்ளது.

கேரளத்தில் அண்மையில் அடுத்தடுத்து நிகழ்ந்த வரதட்சணைக் கொடுமை  உயிரிழப்புகள் காரணமாக பெண்களைப் பாதுகாக்க 24 மணி நேர உதவி மையத்தை அரசு ஏற்படுத்தியது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments