திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய பழை ரூபாய் நோட்டுகள்: ரூ.49 கோடியை மாற்ற முடியாமல் திணறல்
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய பழைய 500 மற்றும் 1000ரூபாய் நோட்டுக்களை இன்னமும் மாற்ற முடியாமல் தேவஸ்தானம் தவித்து வருகிறது.
இதுவரை 49கோடியே 70லட்சம் ரூபாய் அளவுக்கு பழைய நோட்டுகள் இருப்பதாக கூறப்படுகிறது. சுமார் ஒரு லட்சத்து 80ஆயிரம் அளவிலான 1000 ரூபாய் நோட்டுகளும், 6 லட்சத்து 34ஆயிரம் அளவிலான 500 ரூபாய் நோட்டுகளும் தேவஸ்தான கருவூலத்தில் உள்ளன.
இதனை மாற்றக்கோரி நிதி அமைச்சகத்திடம் பலமுறை அனுமதி கேட்டும் இதுவரை உரிய பதில் கிடைக்காததால் தேவஸ்தானம் குழப்பத்தில் உள்ளது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு தீர்வு காணாவிட்டால் இந்த பணத்தை அழிக்க வேண்டியதை தவிர தேவஸ்தானத்திற்கு வேறு வழி இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Comments