காதலியுடன் டூயட் போலீஸ் ஜாக்சனை பிடிக்க தனிப்படை..! பலாத்கார வழக்கில் தேடுகின்றனர்

0 5688

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே அரசியல் பிரமுகரின் பாதுகாப்புக்கான காவலர் ஒருவர், பட்டதாரி பெண்ணை காதல் வலையில் வீழ்த்தி பலாத்கார வழக்கில் சிக்கியதால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். காவலர் ஜாக்சனை தேடும் தனிப்படை குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே அடைக்கலாபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜாக்சன். கடந்த 2018 ல் காவலராக பணியில் சேர்ந்து தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை காவலராக பணிபுரிந்து வந்தார்.

அரசியல் பிரமுகர் ஒருவரின் தனி பாதுகாவலராக பணியில் இருந்து வந்த காவலர் ஜாக்சனிடம், அவரது ஊரை சேர்ந்த பட்டதாரி பெண் ஒருவர் அரசு போட்டித்தேர்வில் பங்கேற்பதற்கான புத்தகங்கள் தொடர்பாக கேட்டு தெரிந்து கொண்டார்.

அப்போது முதல்., அந்த பெண்ணிடம் செல்போன் நம்பரை பெற்ற ஜாக்சன், அந்த பெண்ணிடம் தன்னை ஒரு சாகச வீரன் போல காட்டிக் கொண்டு மணிக்கணக்கில் பேசி காதல் வலையில் வீழ்த்தியுள்ளார். ஓராண்டாக அந்த இளம் பெண்ணுடன் காதல் டூயட் பாடிய காவலர் ஜாக்சன், திருமணம் செய்து கொள்வதாக கூறி காரில் பல இடங்களுக்கு அழைத்து சென்று எல்லைமீறியதாக கூறப்படுகின்றது.

இந்தநிலையில் காவலர் ஜாக்சனிடம் தன்னை திருமணம் செய்துகொள்ள அந்த இளம் பெண் வற்புறுத்திய நிலையில் தற்போது தனது லெவல் உயர்ந்து விட்டதாக கூறி காவலர் ஜாக்சன் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஏமாற்றமடைந்த இளம்பெண், காவலர் ஜாக்சன் மீது கடந்த 17-ம் தேதி திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார்.

இந்தநிலையில் அரசியல் கட்சியினர் தலையீடு காரணமாக காவலர் ஜாக்சனுக்கு எதிரான புகாரை முறையாக விசாரிக்கவில்லை என இளம்பெண்ணின் பெற்றோர் குற்றம்சாட்டினர். இந்ததகவல் அறிந்ததும் பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயகுமார் உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து காவலர் ஜாக்சன் மீது இளம்பெண்ணை காதலித்து ஏமாற்றி திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக இரு பிரிவுகளில் வழக்குபதிவு செயயப்பட்டது.

இதையடுத்து தலைமறைவான ஆயுதப்படை காவலர் ஜாக்சன் பாணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அவரை கைது செய்ய தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்திவருகின்றனர்.

கண்ணியம் மிக்க காவல்துறைக்கு களங்கம் ஏற்படுத்தும் இவர்களை போன்ற சிறு சிறு களைகளை ஆரம்பத்திலேயே சட்டத்தின் துணை கொண்டு அகற்ற வேண்டியது காலத்தின் கட்டாயம்..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments