ஜூலை மாதம் ஜான்சன் and ஜான்சன் தடுப்பூசிகள் இந்தியா வருகின்றன... தடுப்பூசியின் விலை சுமார் ரூ.1800 என தகவல்

0 4909
ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் சிங்கிள் டோஸ் தடுப்பூசி அடுத்த மாதம் குறைந்த அளவில் இந்தியாவில் கிடைக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.

ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் சிங்கிள் டோஸ் தடுப்பூசி அடுத்த மாதம் குறைந்த அளவில் இந்தியாவில் கிடைக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.

The Association of Healthcare Providers என்ற அமைப்பு, ஜான்சன்&ஜான்சன் நிறுவனத்திடம் இருந்து சில ஆயிரம் டோசுகளை நேரடியாக வாங்கி விற்க உள்ளது.

இந்த தடுப்பூசியின் விலை சுமார் 1800 ரூபாயாக இருக்கும் என கூறப்படுகிறது. புதிய விதிகளின் படி, அமெரிக்க மருந்து கட்டுப்பாட்டாளரின் அனுமதியை பெற்ற தடுப்பூசியை இந்தியாவில் சோதித்து பார்க்க தடை இல்லை என்பதால், அடுத்த சில மாதங்களில் ஜான்சன்&ஜான்சன் தடுப்பூசி இந்தியாவில் பயன்பாட்டுக்கு வர அனுமதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உறை நிலையில் வைக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதால் ஜான்சன்&ஜான்சன் தடுப்பூசியை இந்தியாவில் பயன்படுத்துவது சுலபம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments