+2 மதிப்பெண் எளிமையாக கணக்கிடுவது எப்படி?

0 39208
தமிழக அரசு அறிவித்துள்ள முறைப்படி, +2 மதிப்பெண் எளிமையாக கணக்கிடுவது எப்படி? என பார்க்கலாம்...

தமிழக அரசு அறிவித்துள்ள முறைப்படி, +2 மதிப்பெண் எளிமையாக கணக்கிடுவது எப்படி? என பார்க்கலாம்...

பிளஸ் 2 மாணவர்கள் தங்களின் 10-ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற 3 பாடங்களின் கூட்டுத்தொகையை 6-ஆல் வகுத்தால் 50 சதவீத சராசரி மதிப்பெண் கிடைத்துவிடும். அதன்பின் பிளஸ் 1 வகுப்பில் செய்முறைத் தேர்வுள்ள பாடங்களில், உதாரணமாக இயற்பியல், வேதியல் போன்ற பாடங்களில், 70 மதிப்பெண்களுக்கு எழுத்துத் தேர்வு நடைபெறுகிறது. எனவே மதிப்பெண்ணை 3.5 ஆல் வகுத்தால், 20 சதவீதத்துக்கான மதிப்பெண் கிடைத்துவிடும்.

பிளஸ் 1 வகுப்பில் செய்முறைத் தேர்வில்லாத பாடங்களில், உதாரணமாக தமிழ், ஆங்கிலம் போன்ற மொழிப் பாடங்களில் 90 மதிப்பெண்களுக்கு எழுத்துத் தேர்வு நடைபெறுகிறது. எனவே எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண்ணை 4.5 ஆல் வகுத்தால் 20 சதவீதத்துக்கான மதிப்பெண் கிடைத்துவிடும்.

இறுதியாக பிளஸ் 2 வகுப்பில் அகமதிப்பீடு மற்றும் செய்முறைத்தேர்வில் பெற்ற மதிப்பெண்ணை 30-க்கு மாற்றிக் கொள்ள வேண்டும். இந்த 3 விகிதங்களின் கூட்டுத்தொகையே ஒவ்வாரு பாடத்திலும் மாணவர்கள் பெற்ற இறுதி மதிப்பெண்ணாக கணக்கில் கொள்ளப்படும்.

இந்த கணக்கீட்டின்போது, தசம எண்களில் வரும் மதிப்பெண்கள், முழு மதிப்பெண்ணாக கணக்கில் கொள்ளப்படும். உதாரணமாக, 75 புள்ளி 4 என மதிப்பெண் கூட்டுத்தொகை வந்தால், அது 76 மதிப்பெண்ணாக கணக்கில் கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments