சத்து மாத்திரை என பூச்சிக்கொல்லி மாத்திரைகளைக் கொடுத்த மர்ம நபர்-மாத்திரையைச் சாப்பிட்ட ஒரு பெண் உயிரிழப்பு,3 பேர் கவலைக்கிடம்

0 4901
ஈரோடு அருகே சத்து மாத்திரைகள் என்று கூறி, மர்ம நபர் கொடுத்த மாத்திரைகளை சாப்பிட்ட ஒரு பெண் உயிரிழந்த நிலையில், 3 பேர் கவலைக்கிடமாக உள்ளனர்.

ஈரோடு அருகே சத்து மாத்திரைகள் என்று கூறி, மர்ம நபர் கொடுத்த மாத்திரைகளை சாப்பிட்ட ஒரு பெண் உயிரிழந்த நிலையில், 3 பேர் கவலைக்கிடமாக உள்ளனர்.

சென்னிமலையில் டிப்டாப்பாக வந்த மர்ம நபர் ஒருவன், கொரோனா தடுப்பு முகாமிலிருந்து வருவதாகக் கூறி சத்து மாத்திரைகள் என சில மாத்திரைகளைக் கொடுத்துள்ளான். அதனை நம்பி  சாப்பிட்ட 4 பேருக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது.

உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்களில் மல்லிகா என்பவர் வழியிலேயே உயிரிழந்தார். அவர்கள் சாப்பிட்ட மாத்திரை பூச்சிக் கொல்லி மாத்திரை (celphos tablet) என்பது தெரியவந்துள்ள நிலையில், மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments