இந்தோனேசியாவில் சீனத் தடுப்பூசி போட்டுக்கொண்ட மருத்துவர்கள் நூற்றுக்கணக்கானோர் கொரோனா பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 20 உயிரிழப்பு
இந்தோனேசியாவில் சீனாவின் சைனோவாக் தடுப்பூசி போட்டுக்கொண்ட மருத்துவர்கள் நூற்றுக்கணக்கானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பலர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தோனேசியாவில் கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள முன்களப் பணியாளர்களுக்குச் சீனாவின் சைனோவாக் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
புதிய உருமாறிய வகை தொற்றை எதிர்க்கும் செயல் திறன் இந்தத் தடுப்பு மருந்துக்குக் குறைவு எனக் கூறப்படும் நிலையில், தடுப்பூசி போட்டுக்கொண்ட மருத்துவர்கள், செவிலியர்கள், முன்களப் பணியாளர்கள் நூற்றுக்கணக்கானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குடூஸ் என்னும் நகரில் மட்டும் 358 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தடுப்பூசி போட்டுக்கொண்டோரில் குறைந்தது மருத்துவர்கள் 20 பேரும், பிறர் 31 பேரும் உயிரிழந்ததாக இந்தோனேசிய மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
Comments