வேகமாக பரவிவரும் டெல்டா வைரஸ்.. மீண்டும் முகக்கவசத்தை கட்டாயமாக்கிய இஸ்ரேல் அரசு..!
இஸ்ரேலில் டெல்டா வைரஸ் காரணமாக, மீண்டும், பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலில் கொரோனா பரவல் குறைந்து வந்ததையடுத்து, பொது இடங்களில் முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளியை கடைபிடித்தல் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் கடந்த 15 ஆம் தேதி முதல் நீக்கப்பட்டன. இந்நிலையில் அங்கு ஒரே வாரத்தில் 138 பேர் டெல்டா வகை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டதையடுத்து, மீண்டும், முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
சுமார் 90 லட்சம் மக்கள் தொகை கொண்ட இஸ்ரேலில் 55சதவீதத்தினர் கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்றுள்ளனர்.
Comments