ஜூன் 28ஆம் தேதி திங்கட்கிழமை முதல் அரசு விரைவு பேருந்துகள் இயக்கப்படும்: தமிழ்நாடு அரசு
கோவை, நீலகிரி உள்ளிட்ட 11 மாவட்டங்கள் நீங்கலாக எஞ்சிய 27 மாவட்டங்களிலும் வருகிற திங்கட்கிழமை முதல், அரசு விரைவு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் அறிவித்துள்ளார்.
ஏற்கனவே சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த சூழலில் வருகிற திங்கட்கிழமை காலை 6 மணி முதல் மதுரை, திருச்சி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட 23 மாவட்டங்களில் ,மாவட்டங்களுக்குள்ளும், மாவட்டங்களுக்கு இடையேயும், குளிர் சாதன வசதி இல்லாமல் 50 சதவீத பயணிகளுடன் அரசு பேருந்துகள், விரைவு பேருந்துகள் இயக்கப்படும் என செய்திக்குறிப்பு ஒன்றில் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் 9 ஆயிரத்து 333 பேருந்துகள் இயக்கப்படும் என்றும், தேவை இருப்பின் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார். முகக் கவசம் அணிந்து, தனிநபர் இடைவெளியை கடைபிடிக்குமாறு , பயணிகளை அமைச்சர் ராஜ கண்ணப்பன் அறிவுறுத்தி உள்ளார்.
Comments