இந்தியாவிலேயே டெல்டா பிளஸ் பாதிப்பு அதிகம் உள்ள மகாராஷ்டிரா 3வது அலைக்கான ஆபத்து அதிகம் உள்ள மாநிலம் என மத்திய அரசு எச்சரிக்கை

0 3981
இந்தியாவிலேயே டெல்டா பிளஸ் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மகாராஷ்டிரா, மூன்றாவது அலைக்கான ஆபத்து அதிகம் உள்ள மாநிலம் என மத்திய அரசு எச்சரித்துள்ளது.

இந்தியாவிலேயே டெல்டா பிளஸ் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மகாராஷ்டிரா, மூன்றாவது அலைக்கான ஆபத்து அதிகம் உள்ள மாநிலம் என மத்திய அரசு எச்சரித்துள்ளது.

மகாராஷ்டிராவில் மூன்றாவது அலை தாக்கினால், 50 லட்சம் பேர் வரை பாதிக்கப்படுவதுடன், அதில் 5 லட்சம் பேர் சிறார்களாக இருக்கக்கூடும், ஒரேநேரத்தில் சிகிச்சை அளிக்கப்பட வேண்டியவர்கள் எண்ணிக்கை 8 லட்சமாக இருக்கும் என அஞ்சுவதாக மகாராஷ்டிர அமைச்சர் Rajendra Shingne கூறியிருந்தார்.

இதுகுறித்து மத்திய அரசும், மகாராஷ்டிரத்தை ஏற்கெனவே உஷார்படுத்தியுள்ளது. மனிதர்களின் உடலில் வைரஸ் தன்னை தொடர்ந்து பிரதி எடுக்கும்போது ஏற்படும் உருமாற்றங்கள்தான், அது நீடித்திருப்பதற்கு உதவுகின்றன.

ஆனால் வைரஸ்கள் அதிக அளவில் பரவும்போது மட்டுமே பிரதி எடுத்துக் கொள்ள முடியும் என்பதால், பரவலை தடுப்பதே முக்கியமானது.

எனவே, அலைகள் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்றால், அதற்கு நமது அலட்சியப் போக்கே காரணம் என மத்திய சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments