புல்லட் உள்ளிட்ட இருசக்கர வாகனங்களை திருடி ஓ.எல்.எக்ஸ்சில் குறைந்த விலைக்கு விற்பனை செய்த 8 பேர் கொண்ட கும்பல் கைது
ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்களில் புல்லட் உள்ளிட்ட விலை உயர்ந்த பைக்குகளை திருடி ஓ.எல்.எக்ஸ் செயலியில் குறைந்த விலைக்கு விற்பனை செய்து வந்த 8 பேர் கொண்ட கும்பலை சித்தூர் போலீசார் கைது செய்தனர்.
சித்தூர் மாவட்டம் பிளேர் பகுதியை சேர்ந்த ஒருவரின் புல்லட் பைக் திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக மதனப்பள்ளி தொழிற்பேட்டையில் சுற்றித்திரிந்த 3 பேரை கைது செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில் திருட்டு கும்பலின் தலைவன் அனந்தபூர் மாவட்டத்தை சேர்ந்த சுமந்த் பாபு என்பது தெரியவந்தது.
இதனையடுத்து சுமந்த் பாபு உள்ளிட்ட 8 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 45 லட்ச ரூபாய் மதிப்புள்ள 32 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
இந்த கும்பல் புல்லட் உள்ளிட்ட இருசக்கர வாகனங்களை திருடி அதனை ஒ.எல்.எக்ஸ் செயலியில் குறைந்த விலைக்கு விற்பனை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
Comments