இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் தொடர்ந்து முக கவசம் அணிய வேண்டும் - உலக சுகாதார நிறுவனம்

0 3569
இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் தொடர்ந்து முக கவசம் அணிய வேண்டும் - உலக சுகாதார நிறுவனம்

மிகவும் ஆபத்தான டெல்டா பிளஸ் மரபணு மாற்ற வைரஸ் மிக விரைவாக பரவுவதால், இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் கூட தொடர்ந்து முக கவசம் அணிய வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தி உள்ளது.

தடுப்பூசி போடுவதால் சமுதாய தொற்றை தடுத்து விட முடியாது என்பதால், மக்கள் காற்றோட்டமான இடங்களில் இருப்பதுடன், முக கவசத்தையும் தவறாது அணிய வேண்டும் என உலக சுகாதார நிறுவனத்தின் மூத்த இயக்குநர் Mariangela Simao தெரிவித்துள்ளார்.

ஜெனீவாவில் செய்தியாளர் சந்திப்பில் இதை தெரிவித்த அவர், மக்கள் கூட்டமான இடங்களை தவிர்த்து, சமூக இடைவெளி உள்ளிட்ட கொரோனா தடுப்பு முறைகளை பின்பற்றுதல் கட்டாயம்  என்றார்.

டெல்டா மற்றும் டெல்டா பிளஸ் வைரசுகள் வேகமாக பரவும் நிலையில், பல ஏழை நாடுகளில் இன்னும் தடுப்பூசி போடப்படவில்லை என்பதால் உலக அளவில் இந்த வைரசுகள் பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் என அவர் எச்சரித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments