இருதரப்பு படைகளையும் முழுமையாக வாபஸ் பெறுவதற்கான பேச்சுவார்த்தைகளை விரைவில் துவக்க, இந்தியாவும் சீனாவும் ஒப்புதல்
கிழக்கு லடாக் எல்லையில், பதற்றம் நிலவும் இடங்களில் இருந்து, இருதரப்பு படைகளையும் முழுமையாக வாபஸ் பெறுவதற்கான பேச்சுவார்த்தைகளை விரைவில் துவக்க, இந்தியாவும் சீனாவும் ஒப்புக் கொண்டுள்ளன.
எல்லை விவகாரங்களுக்கான இரு நாட்டு ஆலோசனை ஒருங்கிணைப்பு குழுவின் காணொலி கூட்டத்தில் இந்த முடிவு எட்டப்பட்டதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. 2020 இருதரப்பு வெளியுறவு அமைச்சர்களின் சந்திப்பில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில், இந்த பேச்சுவார்த்தைகள் நடைபெறும்.
கடந்த பிப்ரவரியில் பாங்கோங் ஏரிக்கரை பகுதிகளில் இருந்து இருதரப்பு படைகள் வாபஸ் பெறப்பட்டன. அதன் பின்னர் இதர இடங்களில் இருந்தும் படைகளை வாபஸ் பெறுவதற்கான பேச்சுவார்த்தைகளில் எந்த முன்னேற்றமும் ஏற்படாத நிலையில், மீண்டும் துவக்க இப்போது முடிவு செய்யப்பட்டுள்ளது.
Comments