பண மோசடி வழக்கு-மகாராஷ்டிர முன்னாள் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக்கின் உதவியாளர்கள் கைது
பண மோசடி வழக்கில் மகாராஷ்டிர முன்னாள் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக்கின் உதவியாளர்கள் இருவரை அமலாக்கத்துறையினர் கைது செய்துள்ளனர்.
அனில் தேஷ்முக் அமைச்சராக இருந்தபோது உணவகங்கள், விடுதிகளில் இருந்து மாதம் நூறு கோடி ரூபாய் மாமூல் திரட்டித் தரும்படி காவல்துறையினரிடம் கூறியதாக மும்பை முன்னாள் காவல் ஆணையர் குற்றஞ்சாட்டினார். இது தொடர்பாக வழக்குப் பதிந்துள்ள அமலாக்கத் துறையினர் அனில் தேஷ்முக்கின் தனிச் செயலர் சஞ்சீவ் பலாண்டே, நேர்முக உதவியாளர் குண்டன் சிண்டே ஆகிய இருவரிடமும் ஒன்பது மணி நேரம் விசாரித்தனர்.
விசாரணைக்கு முறையாக ஒத்துழைக்கவில்லை எனக் கூறி இருவரையும் கைது செய்துள்ளனர். அனில் தேஷ்முக் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் எனக் கூறி அவருக்கும் சம்மன் அனுப்பியுள்ளனர்.
Comments