டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய ஜூடோ வீராங்கனை தகுதி
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய ஜூடோ வீராங்கனை சுசீலா தேவி முதல் முறையாக தேர்வாகி உள்ளார். 48 கிலோ எடை பிரிவின் ஆசிய தகுதி சுற்றில் கலந்து கொண்டு விளையாடிய இந்திய வீராங்கனை சுசீலா தேவி 989 புள்ளிகள் பெற்று ஆசிய தரவரிசையில் 7-வது இடத்தை பிடித்தார்.
மேலும் ஆசிய மண்டலத்திற்கான ஒலிம்பிக் 10 இட ஒதுக்கீடு அடிப்படையில் சுசீலா தேவி ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார். அடுத்த மாதம் தொடங்க உள்ள டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய தரப்பில் 26 வயதான சுசீலா தேவி மட்டும் தேர்வாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
Comments