தைவான் அரசுடன் தனியாக ராணுவ ஒப்பந்தம் செய்தால் சீனா மீது போர்த் தொடுப்பதற்கு ஈடாகும்..! அமெரிக்காவின் நடவடிக்கைக்கு சீனப்பாதுகாப்பு அமைச்சகம் கண்டனம்
அமெரிக்கா தைவான் அரசுடன் ராணுவ ஒப்பந்தம் மேற்கொள்வது சீனாவுக்கு எதிராக போர்த் தொடுப்பதற்கு ஈடாகும் என்று அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகத்தின் சார்பில் அதன் செய்தித் தொடர்பாளர் ரென் குவாகியாங் அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த ஜூன் மாதம் சீனா சுயாட்சி நடைபெறும் தைவானுக்கு 28 போர் விமானங்களை அனுப்பி வைத்தது. தைவான் வான்பரப்பில் சீனப் போர் விமானங்கள் ஊடுருவல் குறித்து தைவான் அரசு புகார் தெரிவித்தது.
இதனையடுத்து அமெரிக்கா தைவான் இடையே ராணுவ ஒப்பந்தம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியானது. அண்மையில் நடைபெற்ற ஜி 7 மாநாட்டிலும் தைவான் ஜலசந்தியில் அமைதியும் ஸ்திரத்தன்மையும் ஏற்படுவதற்கு தடையாக உள்ள சீனாவின் மனித உரிமை மீறல்களுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தைவானுக்கும் வேறு எந்தவொரு நாட்டுக்கும் இடையே ராணுவ ஒப்பந்தம் செய்ய சீனா எதிர்ப்பதாகவும் அந்நாட்டு பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. ஒன்றிணைந்த சீனா என்ற கோட்பாட்டை மதிக்குமாறும் அமெரிக்காவுக்கு சீனா எச்சரித்துள்ளது.
Comments