தமிழகத்தில் இதுவரை 9 பேருக்கு டெல்டா பிளஸ் வைரஸ் பாதிப்பு..! -சுகாதார அமைச்சகம் தகவல்
தமிழ்நாடு,கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட 10 மாநிலங்களில் 50 பேருக்கு டெல்டா பிளஸ் மரபணு மாற்ற கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 9 பேருக்கு டெல்டா பிளஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வைரசுகளின் மாறிவரும் மரபணு கூறுகளை கண்டுபிடிக்க 10 முதல் 12 நாட்கள் வரை ஆகும் என்பதுடன், டெல்டா பிளசை பொறுத்தவரை, பிளஸ் என்ற சொல்லிற்கு அது வேகமான பரவலை ஏற்படுத்தும் என்ற பொருள் கிடையாது எனவும் சுகாதார அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
மகாராஷ்டிராவில் 80 வயது பெண்மணி ஒருவர் டெல்டா பிளஸ் வைரஸ் பாதித்து உயிரிழந்த நிலையில், புனே மற்றும் தாணே மாவட்டங்களில் ஊரடங்கில் இருந்து அளிக்கப்பட்ட தளர்வுகளை மகாராஷ்டிர அரசு வாபஸ் பெற்றுக் கொண்டுள்ளது.
Comments