அருணாசலப் பிரதேசம் அருகில் உள்ள பகுதிக்கு முதன்முறையாக புல்லட் ரயில் போக்குவரத்தைச் தொடங்கியது சீனா..!
அருணாசலப் பிரதேசத்தின் அருகில் உள்ள சீனப் பகுதிக்கு முதன்முறையாக புல்லட் ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது.
திபெத் தலைநகரான லாசா முதல் நியிங்ச்சி வரை 436 கிலோமீட்டர் தொலைவுக்குச் சீனா புல்லட் ரயில் பாதை அமைத்துள்ளது. அருணாசலப் பிரதேசத்தில் இருந்து 80 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நியிங்ச்சிக்கு இன்று முதன்முறையாக புல்லட் ரயில் போக்குவரத்தைச் சீனா தொடங்கியுள்ளது.
ஜூலை ஒன்றாம் நாள் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டுக் கொண்டாட்டம் என்பதால் அதை முன்னிட்டு ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது.
Comments