ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தகவல்
ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஓலா நிறுவனத்தின் சிஇஓ பவிஷ் அகர்வால், தமது ட்விட்டர் பக்கத்தில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் படத்தை வெளியிட்டு, எந்தெந்த நிறங்களில் வேண்டும் என விருப்பத்தை தெரிவிக்குமாறு குறிப்பிட்டிருந்தார். எனவே ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விரைவில் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
எட்டெர்கோ ஆப்ஸ்கூட்டர் அடிப்படையில், ஓலாவின் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரானது, ஒரு முறை சார்ஜ் ஏற்றிக் கொண்டால் 100 முதல் 150 கிலோமீட்டர் வரை மைலேஜ் தரும் என்றும், ஓரிரு வாரங்களில் விலை அறிவிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Comments