உள்நாட்டிலேயே கட்டப்பட்டு வரும் விமானந்தாங்கிக் கப்பல் அடுத்த ஆண்டில் கடற்படையிடம் ஒப்படைக்கப்படும் - பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

0 3204

உள்நாட்டிலேயே கட்டப்பட்டு வரும் விமானந்தாங்கிக் கப்பல் அடுத்த ஆண்டில் கடற்படையிடம் ஒப்படைக்கப்படும் எனப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

கேரளத்தின் கொச்சியில் உள்ள கடற்படையின் தென்மண்டலக் கட்டளை மையத்தை அமைச்சர் ராஜ்நாத் பார்வையிட்டுக் கடற்படைத் தளபதி கரம்பீர் சிங் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினார். அதன்பின் முதன்முறையாக உள்நாட்டில் கட்டப்படும் விமானந்தாங்கிக் கப்பல் பணிகளையும் பார்வையிட்டார்.

அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாடு விடுதலை பெற்றதன் 75ஆண்டு நிறைவையொட்டி இந்தக் கப்பல் கடற்படைப் பயன்பாட்டுக்கு ஒப்படைக்கப்படும் எனத் தெரிவித்தார்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments