மகாராஷ்டிர முன்னாள் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் வீட்டில் சோதனை
நாக்பூரில் மகாராஷ்டிர முன்னாள் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் வீட்டில் அமலாக்கத்துறையினர் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
அனில் தேஷ்முக் அமைச்சராக இருந்தபோது உணவகங்கள், மது விடுதிகளில் இருந்து மாதந்தோறும் நூறு கோடி ரூபாய் மாமூல் வசூலித்து தர வேண்டும் என கூறியதாக மும்பை முன்னாள் காவல் ஆணையர் பரம்பீர் சிங் குற்றஞ்சாட்டினார்.
இதன் அடிப்படையில் தேஷ்முக் மீது சிபிஐயும், அமலாக்கத்துறையும் வழக்குப் பதிவு செய்தன. இதையடுத்து ஏப்ரல் 5ஆம் நாள் அமைச்சர் பதவியில் இருந்து தேஷ்முக் விலகினார்.
வியாழனன்று மும்பை காவல் துணை ஆணையர் ராஜு புஜ்பாலிடம் வாக்குமூலம் பெற்ற அமலாக்கத்துறையினர், அதன் அடிப்படையில் இன்று நாக்பூரில் அனில் தேஷ்முக் வீட்டில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
Comments