தகவூர் ராணாவை அமெரிக்கா சிறையில் இருந்து வழக்கை சந்திக்க லாஸ் ஏஞ்சலஸ் நீதிமன்றம் உத்தரவு
மும்பைத் தாக்குதல் வழக்கில் முக்கியக் குற்றவாளியான தகவூர் ராணாவை அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்துவது தொடர்பான வழக்கில் தீர்ப்பு வெளியாகியுள்ளது. இதில் ராணாவை அமெரிக்கா சிறையில் இருந்து வழக்கை சந்திக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மும்பையில், 2008ல் கசாப் உள்ளிட்ட 10 தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், 12 அமெரிக்கர்கள் உள்பட 166 பேர் கொல்லப்பட்டனர்.இந்த தாக்குதலில் முக்கிய குற்றவாளியான டேவிட் ஹெட்லி அமெரிக்காவில் கைது செய்யப்பட்டு, 35 ஆண்டு சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்.
அவரது நண்பரும், தாக்குதல் திட்டத்துக்கு உதவியவருமான கனடா தொழிலதிபர் தகவூர் ராணாவை நாடு கடத்தும்படி மத்திய அரசு அமெரிக்காவிடம் கோரிக்கை விடுத்தது. இதையடுத்து, கடந்த ஆண்டு அமெரிக்காவில் அவர் கைது செய்யப்பட்டார்.
அவரை நாடு கடத்தக் கோரிய மனுமீது லாஸ் ஏஞ்சலஸ் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணை இன்று அதிகாலை தொடங்கியது. இதில் ராணாவை அமெரிக்க சிறையில் இருக்க நீதிமன்றம் அனுமதித்தது.
ஜூலை 15ம் தேதிக்குள் கூடுதலான ஆவணங்களைத் தாக்கல் செய்யும்படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Comments