பொது முடக்க தளர்வுகள், நல்ல பருவமழை தொடக்கத்தால் உணவுப் பணவீக்கம் குறைய வாய்ப்பு - தலைமை பொருளாதார ஆலோசகர் கே.வி.சுப்பிரமணியன்

0 3958
பொது முடக்க தளர்வுகள், நல்ல பருவமழை தொடக்கத்தால் உணவுப் பணவீக்கம் குறைய வாய்ப்பு - தலைமை பொருளாதார ஆலோசகர் கே.வி.சுப்பிரமணியன்

பொது முடக்க தளர்வுகள் மற்றும் நல்ல பருவமழை தொடக்கம் ஆகிய காரணங்களால் உணவு பணவீக்கம் குறைய வாய்ப்புள்ளது என்று தலைமை பொருளாதார ஆலோசகர் கே.வி.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

டெல்லியில் பேசிய அவர், கொரோனா இரண்டாம் அலை பாதிப்பை எதிர்கொள்ளும் வகையில் பல மாநிலங்களில் கட்டுப்பாடுகள் மற்றும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்ட காரணத்தால் உணவுப் பொருள்களின் விலை உயர்ந்திருக்கிறது என்றார்.

இருந்தபோதும், மத்திய அரசின் இலவச ரேஷன் பொருள்கள் வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதன் காரணமாக, உணவுப் பணவீக்கம் பெரும்பகுதி மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றும் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments