பீகார் ஆசிரியர் தகுதித்தேர்வு மதிப்பெண் பட்டியலில் குழப்பம் : மாணவனுக்கு பதில் பிரபல நடிகை அனுபமா பரமேஸ்வரனின் புகைப்படம் இடம்பெற்றிருப்பதால் சர்ச்சை

0 6593
பீகார் ஆசிரியர் தகுதித்தேர்வு மதிப்பெண் பட்டியலில் குழப்பம் : மாணவனுக்கு பதில் பிரபல நடிகை அனுபமா பரமேஸ்வரனின் புகைப்படம் இடம்பெற்றிருப்பதால் சர்ச்சை

பீகாரில் ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் பட்டியலில், பிரபல மலையாள நடிகை அனுபமா பரமேஸ்வரனின் புகைப்படம் இடம்பெற்றிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அங்கு ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான தகுதித் தேர்வு, கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்றது. அதற்கான முடிவுகள் கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்டன.

அதில் சில தொழில்நுட்ப பிரச்சினைகள் காரணமாக உருது, சமஸ்கிருதம் மற்றும் அறிவியல் ஆகிய 3 பாடங்களின் மதிப்பெண்கள் வெளியிடப்படாமல் இருந்தது.

அவை தற்போது சரி செய்யப்பட்டு அரசு இணையதளத்தில் மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இதில் ரிஷிகேஷ் குமார் என்ற மாணவரின் மதிப்பெண் பட்டியலில், அவரது புகைப்படத்திற்கு பதிலாக மலையாள நடிகை அனுபமா பரமேஸ்வரனின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments