"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
மாநில பாடத்திட்ட பிளஸ் 2 மாணவர்களுக்கு 10 நாட்களில் மதிப்பெண் கணக்கீட்டு முறையை இறுதி செய்து தேர்வு முடிவுகளை வெளியிட மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
பிளஸ் 2 மாணவர்களுக்கான மதிப்பெண் மதிப்பீட்டு முறையை 10 நாட்களுக்குள் வகுத்து, ஜூலை 31ஆம் தேதிக்குள் முடிவுகளை அறிவிக்குமாறு, மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா பரவல் அதிகரித்த சூழ்நிலையில் மாணவ-மாணவிகளின் பாதுகாப்பு கருதி, சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.
தேர்வுகள் ரத்து செய்யப்பட்டாலும், மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் மதிப்பீட்டு முறையை உருவாக்கி, அதற்கு உச்சநீதிமன்றத்திலும் சிபிஎஸ்இ ஒப்புதல் பெற்றது.
இதனிடையே, 21 மாநில அரசுகளும் பிளஸ் 2 தேர்வுகளை ரத்து செய்தன.
இந்த மாநிலங்கள், பிளஸ் 2 தேர்வு மதிப்பெண் மதிப்பீட்டு முறையை 10 நாட்களுக்குள் இறுதிசெய்து, ஜூலை 31-க்குள் முடிவுகளை அறிவிக்குமாறு, பிளஸ் 2 தேர்வு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Comments