மகாராஷ்ட்ராவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா... ஊரடங்கு தளர்வுகளை நிறுத்த சிவசேனா அரசு முடிவு
மகாராஷ்ட்ராவில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியிருப்பதை அடுத்து மும்பை போன்ற பெருநகரங்களில் ஜூலை மாதம் முதல் அறிவிக்கப்பட இருந்த ஊரடங்குத் தளர்வுகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க சிவசேனா அரசு முடிவு செய்துள்ளது.
இரண்டாவது கொரோனா அலை விடைபெறும் நிலையில் தளர்வுகளை அறிவித்தால் மூன்றாவது அலைக்கு காரணமாகிவிடும் என்று முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். படுக்கை ஆக்சிஜன் வசதிகள் தடுப்பூசி கையிருப்பு போன்றவற்றை கவனத்தில் கொண்டுதான் ஊரடங்கில் தளர்வுகளை அறிவிக்க முடியும் என்றும் அவர் கூறினார்.
தினசரி பாதிப்பு எண்ணிக்கை பத்தாயிரத்துக்கும் கீழே குறைந்து வந்த நிலையில் நேற்று மீண்டும் பத்தாயிரத்தைத் தாண்டியது. டெல்டா பிளஸ் எனும் வீரியம் மிக்க கொரோனா பரவல் மகாராஷ்ட்ராவில் கண்டறியப்பட்டுள்ளதும் கவலைக்கு காரணமாக உள்ளது.
Comments