முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு ஜாமீன் கிடைக்குமா? நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு

0 2621

பாலியல் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மணிகண்டன் ஜாமீன் மனு மீது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது.

திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாக திரைப்பட நடிகை அளித்த புகாரில் மணிகண்டன் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டியுள்ளதால், ஜாமீன் வழங்க கூடாது என காவல்துறை தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.

காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இன்னும் விசாரணை முழுமையாக முடிவடையவில்லை என்றும், புகார் அளித்த பெண்ணை மணிகண்டன் மிரட்டியுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டது. அதேபோல புகார்தாரரான நடிகை  தரப்பில், மணிகண்டனுக்கு  ஜாமீன் வழங்க கடுமையாக ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments