டெல்டா+ வைரஸ்..! கொரோனா 3ஆம் அலைக்கான முதற்படியா?

0 5466
டெல்டா+ வைரஸ்..! கொரோனா 3ஆம் அலைக்கான முதற்படியா?

தமிழ்நாட்டில் கொரோனா 3ஆம் அலைக்கான முதற்படியாக தலைத்தூக்கும் டெல்டா பிளஸ் வைரஸ்

தமிழ்நாட்டில் கொரோனா முழுமையாக கட்டுக்குள் வருவதற்குள், ஆல்பா, டெல்டா மற்றும் டெல்டா பிளஸ் என வித, விதமான வைரஸ் தொற்றுகள் அதிர்வலைகளை உருவாக்கி உள்ளன,

இங்கிலாந்தில் முதன் முதலில் கண்டறியப்பட்ட டெல்டா பிளஸ் வைரஸ், இப்போது17 நாடுகளை எட்டி உள்ளது. இந்தியாவை பொறுத்தவரை, மஹாராஷ்டிராவில் 20 பேர் உள்பட மொத்தம் 40 பேருக்கு இந்த வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்தாத செவிலியர் ஒருவர், இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு, குணமடைந்துள்ளார்.

தமிழ்நாட்டில் கடந்த டிசம்பர் மாதம் முதலே, உருமாறிய கொரோனாவின் பாதிப்பு கண்டறியப்பட்டதாக கூறுகின்றனர்.. சமூக பரவல், வெளிநாட்டினர், எந்த இணை நோயும் இல்லாதோர், தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர், இளம் வயதினர் , குழந்தைகள், நாடு விட்டு நாடு பயணம் செல்வோர், விமான பயணிகள் என 8 பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டு, 1159 பேரிடம் மாதிரிகள் சேகரிப்பட்டு, ஆய்வு மேற்கொள்ளப்பட்டது, இந்த ஆய்வின் முடிவில், 72 சதவீதம் பேருக்கு, டெல்டா வைரஸ் தொற்று உறுதி  செய்யப்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டில் 3ஆம் அலையின் முதல் படிக்கட்டாக டெல்டா பிளஸ் வைரஸ் தலைதூக்கி உள்ளதாக கூறியுள்ள மருத்துவத் துறையினர், இளம் வயதினரையும் இந்த தொற்று தாக்கும் அபாயம் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

எனவே, அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

முகக்கவசம், தனிநபர் இடைவெளி, கிருமி நாசினி மூலம் கைகளை சுத்தப்படுத்துதல், கையுறை அணிதல் என கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்றினால், ஆல்பா, டெல்டா, டெல்டா பிளஸ் என எத்தனை வைரஸ் தொற்றுகள் வரிசைகட்டி வந்தாலும் பாதிப்புகளில் இருந்து நிச்சயம் நம்மால் தப்பிக்க முடியும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments