தமிழகத்தில் ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்படுமா? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை

0 6054
தமிழகத்தில் ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்படுமா? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை

ரடங்கை மேலும் நீட்டிப்பது, கூடுதல் தளர்வுகள் அளிப்பது குறித்து மருத்துவ வல்லுநர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

தமிழகத்தில் தற்போது அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வருகிற 28-ந்தேதியுடன் முடிகிறது.மேலும் நோய்த்தொற்றின் தீவிரத் தன்மையை பொறுத்து மாவட்டங்கள் 3 வகைகளாக பிரிக்கப்பட்டு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், ஊரடங்கை மேலும் நீட்டிக்கலாமா? கூடுதல் தளர்வுகளை அளிக்கலாமா உள்ளிட்டவை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்துகிறார்.

காலை 11 மணிக்கு இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் சுகாதாரத்துறை உயர் அதிகாரிகள், மருத்துவ நிபுணர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments