தென் கிழக்கு ஐரோப்பியாவில் 6 ஆயிரம் ஆண்டுக்கு முன்பு கடலில் மூழ்கிய தீவுப்பகுதி கண்டுபிடிப்பு

0 4175

தென் கிழக்கு ஐரோப்பிய நாடான குரேஷியாவின் கடலோரப் பகுதியில் 6 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மூழ்கிய ஒரு பழமையான தீவுப்பகுதி கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

தொல்லியல் ஆய்வாளர் Mate Parica  என்பவர்,அந்நாட்டின் லூம்பர்டா என்ற   இயற்கை எழில் கொஞ்சும் அழகிய நகரின் கடலோரப் பகுதியை செயற்கைக் கோள் மூலம் ஆய்வு செய்தார். கடலுக்கு அடியில் ஒரு வித்தியாசம் இருப்பதை கண்ட Mate Parica, பாதுகாப்பு அம்சங்களுடன் களமிறங்கி, தரைப்பகுதியில் கிடைத்த பொருட்களை சேகரித்தார்.

பிரதான நிலப்பரப்புடன் இந்த பகுதி இணைக்கப்பட்டு இருந்தது முதற்கட்ட ஆய்வில் உறுதி செய்யப்பட்டது. இந்தஅதிசய தீவின் வரலாற்றை அறிந்து கொள்வதற்கான ஆய்வு பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments