கூகுளுடன் சேர்ந்து ஜியோ உருவாக்கும்உலகிலேயே மிகவும் விலை குறைவான JioPhone NEXT ஸ்மார்ட் போன்
கூகுளுடன் சேர்ந்து மிகவும் குறைந்த விலையில் JioPhone NEXT என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளதாக ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி அறிவித்துள்ளார்.
முப்பையில் ரிலையன்ஸ் குழுமத்தின் வருடாந்திர பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டார். ஜியோ மற்றும் கூகுள் இணைந்து இந்த ஸ்மார்ட்போனுக்கு உகந்த ஆண்ட்ராய்ட் இயங்குதளத்தை -OS- உருவாக்கி வருவதாக அவர் கூறினார். மிகவும் விலை குறைவான இந்த போனில் நவீன போன்களில் இருக்கும் அனைத்து அம்சங்களும் இருக்கும் என்றார் முகேஷ் அம்பானி.
இந்தியாவில் மட்டுமின்றி உலகிலேயே மிகவும் விலை குறைவான JioPhone NEXT வரும் செப்டம்பர் 10 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி முதல் விற்பனைக்கு வர உள்ளதாகவுப் அவர் தெரிவித்துள்ளார்.
Comments