ஆந்திரத்தில் 12ஆம் வகுப்புத் தேர்வு நடத்துவதால் உயிரிழப்பு நேர்ந்தால் அரசே பொறுப்பேற்க வேண்டும் - உச்சநீதிமன்றம்
ஆந்திரத்தில் 12ஆம் வகுப்புத் தேர்வை நடத்துவதால் உயிரிழப்பு நேர்ந்தால் அதற்கு அரசு பொறுப்பேற்பதுடன் ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டியிருக்கும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
12ஆம் வகுப்புத் தேர்வை நடத்தப் போவதாக ஆந்திர அரசு அறிவித்துள்ள நிலையில் அதை ரத்து செய்யக் கோரிய மனு நீதிபதி கன்வீல்கர், தினேஷ் மகேஸ்வரி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆந்திர அரசு தாக்கல் செய்த உறுதிமொழிப் பத்திரத்தில் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கத் தேர்வை நடத்துவதே சிறந்ததாக இருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளது.
ஓர் அறையில் 15 முதல் 18 மாணவர்களை அமரச் செய்து தேர்வு நடத்தப்படும் என்றும், இதற்காக 34 ஆயிரம் அறைகள் தயாராக உள்ளதாகவும், தேர்வு நடத்தும் அலுவலர்கள் 50 ஆயிரம் பேருக்குத் தடுப்பூசி போட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
Comments