போலி கணக்குகள் குறித்த புகார் வந்தால், 24 மணி நேரத்தில் நீக்க வேண்டும்: சமூக ஊடகங்களுக்கு மத்திய அரசு உத்தரவு.

0 3684

திரைப்பட நட்சத்திரங்கள், கிரிக்கெட் வீரர்கள், அரசியல் வாதிகள் உள்ளிட்ட பிரபலமானவர்களின் பெயரில் செயல்படும் போலி கணக்குகள் குறித்த புகார் வந்தால்,  24 மணி நேரத்தில் அவற்றை நீக்க வேண்டும் என டுவிட்டர்,முகநூல், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

சாதாரண நபர்கள் பெயரில் துவக்கப்படும் போலி கணக்குகளுக்கும் இது பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  இப்படி பிரபலமானவர்களுன் புகைப்படங்களுடன் ஒரிஜினல் போன்று இயங்கும்  போலி கணக்குகளால், குற்றச் செயல்கள், பண மோசடி உள்ளிட்டவை நடப்பதுடன், சம்பந்தப்பட்ட பிரபலங்களுக்கு சட்ட சிக்கல்களும் உருவாவதால், இந்த நடவடிக்கையை அரசு கட்டாயமாக்கி உள்ளது. 

சமூக பொறுப்புள்ள அல்லது 50 லட்சத்திற்குப் அதிகமான பயனர்களை வைத்துள்ள சமூக ஊடகங்களுக்கு இது பொருந்தும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments