மாநில பாடத்திட்டத்தில் பிளஸ் 2 பயின்றவர்களுக்கான மதிப்பெண் மதிப்பீடு முறையை 10 நாட்களுக்குள் இறுதி செய்ய வேண்டும் - உச்சநீதிமன்றம்
பிளஸ் 2 மாணவர்களுக்கான மதிப்பெண் மதிப்பீட்டு முறையை 10 நாட்களுக்குள் வகுத்து, ஜூலை 31ஆம் தேதிக்குள் முடிவுகளை அறிவிக்குமாறு, மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா பரவல் அதிகரித்த சூழ்நிலையில் மாணவ-மாணவிகளின் பாதுகாப்பு கருதி, சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. தேர்வுகள் ரத்து செய்யப்பட்டாலும், மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் மதிப்பீட்டு முறையை உருவாக்கி, அதற்கு உச்சநீதிமன்றத்திலும் சிபிஎஸ்இ ஒப்புதல் பெற்றது.
இதனிடையே, 21 மாநில அரசுகளும் பிளஸ் 2 தேர்வுகளை ரத்து செய்தன. இந்த மாநிலங்கள், பிளஸ் 2 தேர்வு மதிப்பெண் மதிப்பீட்டு முறையை 10 நாட்களுக்குள் இறுதிசெய்து, ஜூலை 31-க்குள் முடிவுகளை அறிவிக்குமாறு, பிளஸ் 2 தேர்வு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Comments