ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடர் - நியூசிலாந்து அணி வெற்றி

0 3085
ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடர் - நியூசிலாந்து அணி வெற்றி

ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.

இங்கிலாந்தின் சவுதம்டன் மைதானத்தில் நடந்த இறுதி ஆட்டத்தின் 6வது நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. இரண்டாவது இன்னிங்சில் இந்தியா 170 ரன்கள் மட்டும் குவித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

தொடர்ந்து 138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணியில் கேப்டன் கேன் வில்லியம்சன், ராஸ் டெய்லர் ஜோடி நிலைத்து ஆடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றது.

45 புள்ளி 5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 140 ரன்கள் குவித்து நியூசிலாந்து வெற்றி பெற்றது.

நியூசிலாந்து அணிக்கு கோப்பையுடன் 12 கோடி ரூபாயும், 2-ஆம் இடம் பிடித்த இந்திய அணிக்கு 6 கோடி ரூபாயும் வழங்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments