உருமாறிய டெல்டா பிளஸ் வைரஸ் குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
டெல்டா பிளஸ் எனும் உருமாறிய கொரோனா வைரஸ் குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழகத்தில் முதன்முதலாக செவிலியர் ஒருவருக்கு டெல்டா பிளஸ் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில், அந்த செவிலியருடன் தொடர்பில் இருந்தவர்களின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு வருகிறது என்றார்.
டெல்டா பிளஸ் வைரஸ் வேகமாக பரவும் வீரியமிக்கது என்றாலும், தொடர் சிகிச்சை அளித்தால் குணப்படுத்திவிடலாம் எனவும், மக்கள் அச்சப்பட தேவையில்லை எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
வெளிநாடுகளில் இந்த உருமாறிய வைரஸ் பரவிய போது தடுப்பூசி மூலம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்ற அவர், டெல்டா பிளஸ் குறித்து மருத்துவ வல்லுனர்கள் தொடர் ஆய்வும் நடத்தி வருகிறார்கள் எனவும் கூறினார்.
ஏற்கனவே வெளிநாட்டு விமானங்கள் முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ள நிலையில், மீண்டும் விமான சேவை தொடங்கினாலும் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
Comments