மூளையின் நரம்பு மண்டலத்தை கொரோனா பாதிக்கிறது என ஆய்வாளர்கள் தகவல்
இங்கிலாந்தில் நடைபெற்ற அண்மைக்கால ஆய்வில், கோவிட் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் மூளையில் உள்ள கிரே செல் எனப்படும் நரம்பு மண்டலம் பாதிக்கப்படுவதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
மோப்ப சக்தி, நாவின் ருசி, நினைவுக்கோர்வை போன்ற செயல்பாடுகளை இந்த நரம்பு மண்டலம் செய்து வருகிறது. கொரோனாவால் பாதிப்படைந்து குணமடைந்தவர்களுக்கு பின்விளைவாக மூளை நரம்புகளில் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று பரவுவதற்கு முன்பே மூளை நரம்புகளின் செயல்பாடுகள் குறித்து சுமார் 40 ஆயிரம் பேரிடம் பரிசோதனை நடத்தப்பட்டு ஆய்வு செய்யப்பட்டதாக இங்கிலாந்தின் பயோ பேங்க் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.
பின்னர் கொரோனா பரவியதும் அதன் தாக்கம் மூளையில் ஏற்படுத்தும் பாதிப்பு குறித்து ஆய்வை விரிவுபடுத்தியதாகவும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
Comments